ஆறு வருடத்திற்குப் பிறகு இலங்கை வரும் இங்கிலாந்து | தினகரன்

ஆறு வருடத்திற்குப் பிறகு இலங்கை வரும் இங்கிலாந்து

மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வருகிறது

இங்கிலாந்து அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இலங்கை வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதை 1-1 என இங்கிலாந்து டிரா செய்திருந்தது. 2007-ம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போதுதான் மூன்று டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதலில் தொடங்குகிறது. ஒக்டோபர் 10-ம் திகதி முதல் ஒருநாள் போட்டியும், 13-ம் திகதி 2-வது ஒருநாள் போட்டியும் தம்புள்ளயில் நடக்கிறது. 3-வது ஒருநாள் போட்டியும், 4-வது ஒருநாள் போட்டியும் முறையே 17 மற்றும் 20-ம் திகதிகளில் பல்லேகலயில் நடக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் நடக்கிறது.

ஒரேயொரு ரி 20 போட்டி 27-ம் திகதி கொழும்பில் நடக்கிறது. அதன்பின் முதல் டெஸ்ட் காலியில் நவம்பர் 6-ம் திகதி முதல் 10-ம் திகதி வரையும், 2-வது டெஸ்ட் நவம்பர் 14-ம் திகதி முதல் 18-ம் திகதி வரை பல்லேகலயிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 23-ம் திகதி முதல் 27-ம் திகதி வரை எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடக்கிறது. 


Add new comment

Or log in with...