பசறை லயன் குடியிருப்பில் தீவிபத்து | தினகரன்

பசறை லயன் குடியிருப்பில் தீவிபத்து

 

பதுளை–பசறைவீதி 3ம் கட்டை வேவெஸ்ஸ தோட்ட மாணிக்கவள்ளி பிரிவில் அமைந்துள்ள 7ம் இலக்கத் தொடர் லயன் குடியிருப்பின் லயன் அறையொன்று இன்று அதிகாலை (17) தீக்கிரையாகி முற்றாக சேதமாகியுள்ளது.

மின்சார ஒழுக்கின் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இடம்பெறும் போது குறித்த குடியிருப்பு அறையில் 60 வயதுமதிக்கத்தக்க பெண் ஒருவரும் 9 தொடக்கம் 17 வயதிற்கிடைப்பட்ட 3 சிறுமிகளும் நித்திரையில் இருந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்டதீப்பரவல் வெடிப்புச் சத்தத்தை கேட்டுஅயலவர்கள் உடனடியாகவீட்டு ஜன்னலைஉடைத்து பாதுகாப்பாக அவர்களை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிசார் பதுளை மாநகர சபை தீயணைப்புபிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்புபடையினர் ஊர் பொதுமக்களின் உதவியுடன் தீயைஅணைத்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இவ்வீடு சவுதிநாட்டில் பணிப்பெண்ணாகபணிப்புரியும் குமார் கலைவாணி என்பவருடையது.  இச்சந்தர்ப்பத்தில் வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களும் பெறுமதிவாய்ந்த பொருட்களும் முற்றாகசேதமடைந்துள்ளன. சுமார் 7 இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக குடும்பஉறுப்பினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பதுளைபொலிசார் மேலதிகவிசாரணைகளைமேற்கொண்டுவருகின்றனர்.

(பசறைநிருபர்)

 


Add new comment

Or log in with...