அமெரிக்காவில் மேம்பாலம் இடிந்து விபத்து:4 பேர் பலி | தினகரன்

அமெரிக்காவில் மேம்பாலம் இடிந்து விபத்து:4 பேர் பலி

 

அமெரிக்காவில் நான்கு வழி நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளின் அடியில் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசல் மிக்க இந் நெடுஞ்சாலையில் இவ் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 950 மெற்றிக் தொன் எடைகொண்ட கொங்கிறீட் மேம்பாலம் விழுந்ததில் பாலத்தின் கீழ் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கின. அதற்குள் சிக்கியிருக்கும் நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவின் தெற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புளோரிடா சர்வதேச பல்கலையையும், எதிரே மாணவர் விடுதியையும் இணைக்கும் 174 அடி நீள நடைமேடை பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று இப்பாலம் திடீரென இடிந்து சாலையில் நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாலம் இடிந்ததையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

10க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

 


Add new comment

Or log in with...