அரசியல்வாதியாக 100 சதவீதம் செயல்பட இருப்பதாக ரிஷிகேஷில் ரஜினி தெரிவிப்பு | தினகரன்

அரசியல்வாதியாக 100 சதவீதம் செயல்பட இருப்பதாக ரிஷிகேஷில் ரஜினி தெரிவிப்பு

அரசியல்வாதியாக 100 சதவீதம் சிறப்பாக செயல்பட இருப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், தயானந்த் சரஸ்வதி ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்மிக புத்தகங்கள் படிப்பதற்காகவும், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை சந்திப்பதற்காகவும், இங்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

தாம் இன்னும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை என்றும் அவர் கூறினார். இன்றைய இளைய தலைமுறையினர் கடவுள் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அது மிக முக்கியமானது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

கடவுள் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கற்றுத் தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தன்னால் சுதந்திரமாக வெளியே சென்று வர முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்பு நடிகர் பாத்திரத்தை கொடுத்திருந்த கடவுள் தற்போது அரசியல் பாத்திரம் கொடுத்துள்ளதாகவும், அதில் 100 சதவிதம் சிறப்பாக செயல்பட இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...