Saturday, April 20, 2024
Home » உணவகங்களில் பணிபுரிபவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்

உணவகங்களில் பணிபுரிபவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்

-சுகாதார வைத்தியதிகாரி ​ெடாக்டர் ஏ. எம்.முகம்மது இஸ்ஸதீன்

by sachintha
November 10, 2023 10:43 am 0 comment

 

உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் பணிபுரிபவர்கள் மருத்துவ சான்றிதழை தன்வசம் வைத்திருக்க வேண்டுமென, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ​ெடாக்டர் ஏ. எம்.முகம்மது இஸ்ஸதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ெடாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனைக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள், பேக்கரிகள் என்பவற்றில் இரவு வேளைகளில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பரிசோதனையின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பாவனைக்குதவாத உணவுப் பண்டங்கள், காலவதியான உணவுப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வருவதுடன் உரிமையாளர்களுக்கு முதல் தடவையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உணவு சட்ட விதிமுறைகள், நுகர்வோர் விவகாரசட்டங்கள் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு அமைய வேண்டுமெனவும், உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் கையுறை போன்றவற்றை பாவிக்க வேண்டுமென கேட்டுள்ளார். உணவு பாதுகாப்பு சட்ட திட்டங்களை மீறுபவர்களுக்கெதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT