இலங்கையா, பங்களாதேஷா? இன்று தீர்மானம் | தினகரன்

இலங்கையா, பங்களாதேஷா? இன்று தீர்மானம்

 

இன்று கடைசி லீக் போட்டி

இலங்கை- பங்களாதேஷ் அணிகள் இன்று நடைபெறும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார் என்பது இந்த போட்டியில் தெரியவரும்.இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது இலங்கையா? பங்களாதேஷா? என்பது இன்று (16-ம் திகதி) தெரியவரும். இரு அணிகளும் இன்று நடைபெறும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் மோதுகின்றன.

இலங்கை,இந்தியா, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் கடந்த 6-ம் திகதி தொடங்கியது.

இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்திய அணிக்கு ‘லீக்’ ஆட்டம் முடிந்துவிட்டது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதில் வெற்றி பெறும் அணி 18-ம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இரு அணிகளுமே 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

இலங்கை அணி ஏற்கனவே பங்களாதேஷிடம் 214 ஓட்டங்கள் குவித்தும் தோற்றது. இதனால் அதற்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.

பங்களாதேஷ் அணி ஏற்கனவே இலங்கையை வீழ்த்தி இருந்ததால் மீண்டும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நுழைய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. 


Add new comment

Or log in with...