ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை | தினகரன்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

 

பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்தது.

இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி குரோத கருத்துக்களை முன்வைத்தது தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது.இதில் முக்கிய சந்தேகநபராக ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜப்பானுக்கு சென்றுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

பொது இடங்களிலும் ஊடக மாநாடுகளிலும் இன குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டதாக இவருக்கு எதிராக பலரும் முறையிட்டிருந்தது தெரிந்ததே. (பா)


Add new comment

Or log in with...