பிரபல பௌதீக விஞ்ஞானி ஹொகிங் காலமானார் | தினகரன்

பிரபல பௌதீக விஞ்ஞானி ஹொகிங் காலமானார்

பிரபல பௌதீக விஞ்ஞானி ஹொகிங் காலமானார்-Theoretical Physicist Stephen Hawking Passed Away

 

பிரிட்டன் நாட்டின் பிரபல கோட்பாட்டு பௌதீகவியலாளரான ஸ்டீபன் ஹொகிங் தனது 76 வயதில் காலமானார்.

கருந்துளை மற்றும் சார்பியல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஹொகிங், புகழ்பெற்ற பல விஞ்ஞான புத்தகங்களையும் எழுதியவராவார்.

“எமது அன்புக்குரிய தந்தை இன்று காலமானதை ஒட்டி நாம் ஆழ்ந்த கவலையில் உள்ளோம்” என்று அவரது குடும்பத்தினர் இன்று (14) அறிவித்தனர்.

தனது 22 வயதில் மோட்டார் நியூரோன் என்ற ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் ஹொகிங் ஒருசில ஆண்டுகளே உயிர்வாழ்வார் என்று கூறப்பட்டவராவார். இந்த தீராத நோய் காரணமாக சக்கர நாற்காலியின் உதவியோடு இயங்க வேண்டி ஏற்பட்ட ஹொகிங்கினால் கணனியின் உதவியுனே பேச முடியும்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்திற்கு அருகில் இருக்கும் தனது வீட்டில் அவர் அமைதியாக உயிர் நீத்ததாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். ஹொகிங் எழுதிய A Brief History of Time புத்தகம் 10 மில்லியன் பிரதிகள் விற்றமை குறிப்பிடத்தக்கது. 

பல்கலைக்கழகத்தில் பயிலும்போது அவருக்கு மோட்டார் நியூரோன் நோய் காணப்பட்டமை அறிய வந்தது

(எஸ். பிர்தௌஸ்)

 


Add new comment

Or log in with...