சீதுவை குற்றப் பிரிவு OIC மார்ச் 28 வரை விளக்கமறியல் | தினகரன்

சீதுவை குற்றப் பிரிவு OIC மார்ச் 28 வரை விளக்கமறியல்

சீதுவை குற்றப் பிரிவு OIC மார்ச் 28 வரை விளக்கமறியல்-Seeduwa Police Crime Division OIC Remanded

 

வியாபாரி ஒருவரிடமிருந்து ரூ 25,000 இலஞ்சம் பெற முயற்சி செய்த, சீதுவை பொலிஸ் குற்ற பிரிவு பொறுப்பதிகாரிக்கு மார்ச் 28 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (13) கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெறும்போது, குறித்த பொலிஸ் அதிகாரி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால், கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வியாபாரியினால் மேற்கொள்ளப்பட்ட, முறைப்பாடு தொடர்பில், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நபரை கைது செய்து, முறைப்பாட்டை மேற்கொண்டவருக்கு சாதகமாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு இவ்வாறு இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்திருந்தார்.

 


Add new comment

Or log in with...