Saturday, April 20, 2024
Home » அமெரிக்க ட்ரோனை வீழ்த்தியது ஹூத்தி

அமெரிக்க ட்ரோனை வீழ்த்தியது ஹூத்தி

by sachintha
November 10, 2023 10:38 am 0 comment

காசாவில் இஸ்ரேலின் போருக்கு ஆதரவாக உளவு பார்க்கும் அமெரிக்காவின் எம்.கியூ.–9 உளவு விமானத்தை யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.

யெமன் கடற்கரைக்கு அப்பால் இந்த ட்ரோன் சூட்டுவிழ்த்தப்பட்டாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக யெமனுக்கு சொந்தமான கடற்பகுதியில் கண்காணிப்பு மற்றும் உளவு வேலையில் ஈடுபட்ட அளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஆதரவு ஹூத்திக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரங்களில் இஸ்ரேலை இலக்கு வைத்து ஹூத்திக்கள் பல முறை தாக்குதல்களை நடத்தி இருந்தனர். அவ்வாறான பல ஏவுகணைகளை அமெரிக்க கடற்படை இடைமறித்திருந்தது.

யெமன் தலைநகர் சானாவை 2014 ஆம் ஆண்டு கைப்பற்றிய ஹூத்திக்கள் அந்நாட்டின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT