இன்றும் நாட்டில் மழை காலநிலை; மீனவர்களுக்கும் எச்சரிக்கை | தினகரன்

இன்றும் நாட்டில் மழை காலநிலை; மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றும் நாட்டில் மழைக்காலநிலை; மீனவர்களுக்கும் எச்சரிக்கை-Weather Forecast-Rain-Warning to Fisherman

 

இலங்கைக்கு மேற்காக அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாத்தறையூடாக மன்னார், காலி மற்றும் கொழும்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதானநிலையம் எச்சரித்துள்ளது.

அத்துடன் காற்றின் வேகம் திடீரென மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும் என்றும் இதனால் கடல் அலைகளின் வேகமும் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு வானிலை அவதானநிலையம் கோரியுள்ளது.

தாழமுக்கம் மேலும் அதிகரித்து நாட்டை விட்டு அரபிக்கடலூடாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Add new comment

Or log in with...