மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய நபர் கைது! | தினகரன்

மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய நபர் கைது!

 

பாடசாலையை விட்டு வரும் வழியில் இளம் வயது மாணவிகளை இலக்கு வைத்து ஆபாசப் படம் காட்டிய இளம் சாரதி ஓருவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் இளம் வயது மாணவிகள் இருவரை இலக்கு வைத்து ஆபாசப் படம் காண்பித்த  இளம் சாரதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹியத்தகண்டி பிரதேசமெங்கும் சிறிய ரக லொறியொன்றின் மூலம் வீட்டுப் பாவனை பொருட்களை விற்பனை செய்து வரும் குறித்த நபர் மாணவிகளை  லொறியருகில் அழைத்து தனது கையடக்கத் தொலை பேசியில் இருந்த ஆபாசப் படம் காட்டியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கூக்குரலிட்டு கல்லெறிந்து தாக்கியதுடன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடமும் விடயத்தை கூறியதுடன் குறித்து வைத்திருந்த லொறியின் இலக்கத்தினையும் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்ட மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளார். குறித்த நபரை எதிர்வரும் 21ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(ஊவா சுழற்சி நிருபர்) 

 


Add new comment

Or log in with...