கொலம்பிய தேர்தலில் பார்க் கெரில்லாக்கள் பின்னடைவு | தினகரன்

கொலம்பிய தேர்தலில் பார்க் கெரில்லாக்கள் பின்னடைவு

 

கொலம்பிய பாராளுமன்ற தேர்தலில் பார்க் கிளர்ச்சியாளர்களுடனான, 2016 அமைதி உடன்படிக்கையை எதிர்த்த பழைமைவாத கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.

முன்னாள் பார்க் கெரில்லாக்கள் தற்போது ஓர் அரசியல் கட்சியாக மாறியிருக்கும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் அந்நாட்டில் இடம்பெற்ற முதல் தேர்தலாக இருந்தது.

எனினும் இந்த அமைதி உடன்படிக்கையை எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ உரிபேவின் மத்திய ஜனநாயக கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ளது.

அதிக எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட பார்க் மிக மோசமான பெறுபேறை பெற்றுள்ளது. எனினும் அமைதி உடன்படிக்கையின் கீழ் அந்த கட்சிக்கு சில ஆசனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பார்க் கட்சி மொத்த வாக்குகளில் 0.4 வீதத்தையே பெற்றுள்ளது. எனினும் அந்த கட்சிக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலா ஐந்து ஆசனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பார்க் மற்றும் கொலம்பிய அரசுக்கு இடையில கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக இடம்பெற்ற மோதலில் 220,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 


Add new comment

Or log in with...