சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றி | தினகரன்

சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றி

 

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

153 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அணியின் தலைவர் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர்.

இருவரும் அடித்து ஆடுவார்கள் என்ற நிலையில் சர்மா 11 ஓட்டங்களுடனும் தவான் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க பின்னர் வந்த ரைனா தனக்கு உரித்தான பாணியில் அடித்து ஆடிய வேளையில் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ராகுல் 18 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தார்.

பின்னர் பாண்டே மற்றும் விக்கெட் காப்பாளர் கார்த்திக் இருவரும் நிதானமாக ஆடிய இருவரும் முறையே 42 மற்றும் 39 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டையும் பெர்னாண்டோ ,மென்டிஸ் தல ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர். சுதந்திர கிண்ண முத்தரப்பு ரி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை-இந்திய அணிகள் ஆடிய ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சர்மா களத்தடுப்பை தெர்வு செய்தார்.

வழக்கமாக போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். ஆனால் நேற்று தூறல்மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

மழை நின்றதும் ஆட்டம் 8.20 மணிக்கு தொடங்கியது இரு அணிகளுக்கும் 19 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

8.05 மணிக்கு நாணயச்சுழற்சி மேற்கொள்ளப்பட்டது. இலங்கை அணியில் சந்திமால் தடை செய்யப்பட்டதால் சுரங்க லக்மல் அணியில் சேர்க்கப்பட்டார்.

அணித்தலைவராக திஷர பெரேரா நியமிக்கப்பட்டார்.அவர் பங்களாதேஷ் அணியுடனான ஆட்டத்திலும் தலைமை தாங்குவார்.

இந்திய அணியில் ரிஷ் பந்த் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.

முதலில் துடுப்பெடுதாடிய இல ங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இளம் வீரர் குஷல் மெண்டிஸ் 38 பந்து களை எதிர் கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 55 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்களாக களமிறங்கிய குணத்திலக்க 17 ஓட்டங்களுடனும் உபுல் தரங்க 22 ஓட்டங்களுடனும் அணியின் தலைவர் திஷர பெரேரா 15 ஓட்டங்களுடனும் தசுன் சானக்க 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் பிராகாசித்த குஷல் பெரேரா இப்போட்டியில் வெறும் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக தாகூர் 4 விக்கெட்டையும் சுந்தர் இரு விக்கெட்டையும் உன்கந்ட் ,சஹால் ,வி. சங்கர் தலா ஒரு விக்கெட் வீதம் பதம் பார்த்தனர்.

இந்திய -பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆட்டம் நாளை இதே அரங்கில் இடம்பெறும்.

இந்திய அணி இவ்வாட்டத்தின் வெற்றியுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 


Add new comment

Or log in with...