இண்டியன் வெல்ஸ்-; 3-வது சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் நேருக்குநேர் பலப்பரீட்சை | தினகரன்

இண்டியன் வெல்ஸ்-; 3-வது சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் நேருக்குநேர் பலப்பரீட்சை

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் (பின்பி பரிபாஸ் பகிரங்க ) நடைபெற்று வருகிறது.

இதில் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்று விளையாடி வருகிறார். குழந்தை பெற்ற பிறகு மீண்டும் டென்னிஸ் களத்திற்குள் கால்பதிக்க இந்த தொடரை செரீனா வில்லியம்ஸ் அதிக அளவில் நம்பி களமிறங்கியுள்ளார்.

முதல் செட்டில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், 2-வது சுற்றில் 35-ம் நிலை வீராங்கனையான சொரானா கிர்ஸ்டீ-ஐ எதிர்கொண்டார்.

இதில் 6--3, 6--4 என நேர்செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 79 நிமிடங்கள் தேவைப்பட்டது. செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் தனது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ்சை எதிர்கொள்கிறார்.

இருவரும் இதற்கு முன் 28 முறை நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர். கடைசியாக இருவரும் 2017 அவுஸ்திரேலிய பகிரங்க இறுதிப் போட்டியில் மோதினார்கள். இதில் செரீனா 6--4, 6--4 என வெற்றி பெற்றார். 


Add new comment

Or log in with...