Home » மேன்மையுடன் 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் Hemas Hospitals

மேன்மையுடன் 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் Hemas Hospitals

- பாரம்பரிய பாராமறிப்பின் மரபுடன் இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமம்

by Rizwan Segu Mohideen
November 9, 2023 11:42 am 0 comment

இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், 2023 ஆம் ஆண்டில் தனது 15 ஆண்டுகள் நிறைவைப் பெருமையுடன் கொண்டாடுகின்றது. குறிப்பிடத்தக்க இச்சாதனை, ஆரோக்கியமான வாழ்வின் மீது அது காண்பிக்கும் ஓயாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பது மட்டுமன்றி, இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சமூகத்தைக் கட்டியெழுப்புதல், புத்தாக்கம் மற்றும் சாதனைகள் நிறைந்த போற்றத்தக்க பயணத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.  

நோயாளரை மையப்படுத்திய கவனிப்பு, அதிநவீன தொழில்நுட்பம், சமூக சேவை முன்னெடுப்புக்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கான நலத் திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மிகவும் தைரியமான  வணிக நகர்வுகளின் மூலமாக ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம், சுகாதாரத்தை மேம்படுத்தும் அதேவேளை, உள்ளங்களைக் கவர்ந்து, இலங்கையில் மிகவும் நம்பிக்கை மிக்க மற்றும் போற்றப்படுகின்ற நிறுவனம் என்ற தனது இடத்தை ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது. வத்தளை மற்றும் தலவத்துகொடை போன்ற வளர்ச்சி வாய்ப்புக்கள் கொண்ட, சுகாதார வசதிகள் குறைந்த சமூகங்கள் மத்தியில் வைத்தியசாலைகளை ஆரம்பித்து, இச்சமூகங்களின் வளர்ச்சி வாய்ப்புக்களை முன்னெடுப்பதில் ஒரு உந்துசக்தியாகத் திகழ்ந்து வருகின்ற ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார வசதிக்கேற்ற கட்டுபடியான வழிகளில் சுகாதாரப் பராமரிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்து வருகின்றது.  

வத்தளைப் பிரதேசத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலை என்ற பெருமையைக் கொண்ட ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், இச்சமூகத்தின் பாதுகாவலராக மாறி, புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவித்து, சமூகத்துடன் கைகோர்த்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருகின்றது. தலவத்துகொடையில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் ஆரம்பிக்கப்பட்டமையால், வளர்ந்துவரும் புறநகர்ப் பகுதியில் உள்ளவர்களுக்கு  உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பை இலகுவாக வழங்குவதுடன், இச்சமூகத்தின் மத்தியில் அபிவிருத்திக்கான தாராளமான வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கின்றது.   

இச்சாதனைமிக்க பயணம் தொடர்பில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி லகித் பீரிஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கை மக்கள் அனைவருக்கும் கருணைமிக்க சுகாதாரப் பராமரிப்பை இதயபூர்வமாக வழங்கும் அதேசமயம், நாம் இயங்குகின்ற சமூகங்களை வளம்செழிக்க செய்வதே எப்போதும் எமது இலக்காகக் காணப்படுகின்றது. இதனை மேற்கொள்வதற்கு, நோயாளர்களின் தேவைகளை நாம் கேட்டறிந்து, ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மேம்பாடுகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நோயாளரை மையப்படுத்திய கவனிப்பு, டிஜிட்டல் சுகாதார மேம்பாடுகள், இலத்திரனியல் முறையிலான  சுகாதாரப் பதிவேடு மற்றும் தொலைவியக்க அடிப்படையிலான மருத்துவ சேவைகள் போன்ற எமது முன்னோடி முயற்சிகள் சமூகத்தின் மீதான எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக, இலங்கையில் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் வடிவத்தை நாம் மாற்றியமைத்துள்ளதுடன், இலங்கை மக்கள் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற அனைத்து வகையான உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்கி, எதிர்வரும் காலங்களிலும் தொழில்நுட்பரீதியான மேம்பாடுகளை தொடர்ந்தும் வழங்க ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.        

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் தனது 15 வருட கால வரலாற்றின் முற்பகுதியில் சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்ற இலங்கையின் முதலாவது வைத்தியசாலை வலையமைப்பு என்ற சாதனையையும் படைத்திருந்தது. பெருமதிப்புமிக்க Australian Council on Healthcare Standards International (ACHSI) இன் சான்று அங்கீகாரம், உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பை தெளிவாகக் காண்பிக்கின்றது. இதற்கும் மேலாக, இலங்கையில் அதிகமான சான்று அங்கீகாரங்களைப் பெற்றுள்ள வைத்தியசாலை வலையமைப்பு என்ற தனித்துவமான சிறப்பையும் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் கொண்டுள்ளது. உலகளாவில் பரவிய தொற்றுநோய் விளைவித்த சவால்களுக்கு சளைக்காது முகங்கொடுத்து, இலங்கையில் கொவிட் சான்று அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையிலுள்ள ஒரேயொரு வைத்தியசாலை என்ற அந்தஸ்துடன், நோயாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பான மற்றும் உரிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் கொண்ட சூழலில் சிகிச்சையளிக்கப்படுவதை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் உறுதி செய்தது.  

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஒரு முன்னோடியாக, இலத்திரனியல் முறையில் சுகாதாரப் பதிவு ஆவணப்படுத்தலை (Electronic Health Records -EHR) நடைமுறைப்படுத்திய முதலாவது இலங்கை வைத்தியசாலையாக மாறி, ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வரலாறு படைத்தது. இச்சாதனை நோயாளர் மீதான கவனிப்பை முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றதுடன், விபரங்களை உடனடி அணுகல் மற்றும் உச்சபட்ச அந்தரங்கம் பேணல் ஆகியவற்றினை உறுதி செய்து, தலைசிறந்த, வினைத்திறன்மிக்க மற்றும் உரிய நேரத்தில் கிடைக்கின்ற மற்றும் பிரத்தியேகமயப்படுத்தப்பட்ட கவனிப்பிற்கு வழிவகுத்தது. எந்தவொரு ஹேமாஸ் வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவர் சிகிச்சை பெறச் சென்றாலும் அவரது முந்தைய வரலாற்றை தங்குதடையின்றி பெற்றுக்கொள்வதற்கு இது இடமளித்ததுடன், இலங்கையில் முதற்தடவையாக சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சர்வவழி அனுபவத்தின் மூலமாக நிகரற்ற இடைஇயக்கத்திற்கு இடமளித்துள்ளது.   

அதிநவீன தொழில்நுட்பத்தின் மீதான அர்ப்பணிப்பிற்கு அமைவாக, போற்றத்தக்க டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்தை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் முன்னெடுத்துள்ளது. வைத்தியசாலையினுள் அனைத்து ஆவணங்களும் தங்குதடையின்றிய டிஜிட்டல் சுகாதாரத் தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பான, அனுமதிக்கப்பட்ட வழியிலான தரவுப் பகிர்வு விதிமுறையுடன், காகிதங்களின் பாவனையற்ற எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியை இது குறிக்கின்றது. நோயாளரை மையப்படுத்திய கவனிப்பிற்குப் புறம்பாக, தொழில்நுட்பத்தை உள்வாங்குவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இச்சாதனை புலப்படுத்துகின்றது. இந்த தொடர்ச்சியான முயற்சிகள் அதிநவீன தீர்வுகளை உள்வாங்கும் அதன் முனைப்பினைக் காண்பிக்கின்றன. செயற்கை நுண்ணறிவின் ஆற்றலின் மூலமான நோயைக் கண்டறியும் முறைகள் மற்றும் அதற்கேற்றவாறாக துல்லியமான மருந்துகளை வழங்குதல், தொலைவியக்க அடிப்படையில் வைத்தியரைத் தொடர்புகொண்டு சிகிச்சை பெறும் வசதி மற்றும் டிஜிட்டல் சுகாதாரக் கருவிகள் என மருத்துவத்துறையின் முன்னேற்றத்தில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் எப்போதும் முன்னிலை வகித்து வருகின்றது. 

சுகாதாரப் பராமரிப்பில் டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸின் முயற்சிகள், இலங்கையின் முதற்தர ஸ்மார்ட் வைத்தியசாலை என்ற தனித்துவமான நன்மதிப்பையும் அதற்கு சேர்ப்பித்துள்ளது. தொலைவியக்க அடிப்படையில் வைத்திய ஆலோசனை (TeleMedicine), இணைய வழி மருந்தகம் (Online Pharmacy), நோயாளர்களுக்கு 24 மணி நேரமும் டிஜிட்டல்ரீதியாக மருத்துவ ஆவணப்பதிவுகளை அணுகுவதற்கு இடமளிக்கின்ற இணைய வழி ஆய்வுகூட நுழைமுகம் (Online Laboratory Portal), மற்றும் தொலைவியக்க அடிப்படையிலான உடற்பயிற்சி சிகிச்சை (பிசியோதெரபி) அடங்கலாக பல்வேறுபட்ட புத்தாக்கமான, டிஜிட்டல்ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற சுகாதாரத் தீர்வுகளை இது அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவைகள் நோயாளர்களுக்கு பெறுமதி, சௌகரியம் மற்றும் ஆறுதலை வழங்குவதுடன், அவர்களின் மன அழுத்தம் மற்றும் அசௌகரியங்களைக் குறைத்து, அனைவரும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழிகோலுகின்றது. சாதாரண தடிமன் முதல் சத்திர சிகிச்சைக்குப் பின்னரான தேறுதல் வரை நோயாளர்கள் குணமடைய உதவ அல்லது மிகவும் பரீட்சயமான சூழலில் சிறப்பான மருத்துவ நிலைமைகளின் கீழ் குணமடைய உதவும் வகையில் அனைத்தையும் உங்களது வீடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ள ஏதுவாக, தொலைவியக்க அடிப்படையில் கண்காணிக்கப்படும் வசதி உட்பட, வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுகின்ற அதே கவனிப்பை உங்களது வீடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள ஹேமாஸ் ஹோம் கெயார் (Hemas Home Care) வழிவகுக்கின்றது. 

கலாநிதி லகித் பீரிஸ் அவர்கள் மேலும் கூறுகையில், “15 ஆண்டுகளை நாம் எட்டுகின்ற இத்தருணத்தில், ‘இணைந்த கவனிப்பு மற்றும் புத்தாக்கங்கள் மூலம் வாழ்க்கையை மாற்றுதல்’ (transforming lives through connected care and innovation) என்ற எமது நோக்கத்துடன் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றோம். செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படுகின்ற நோய் கண்டறியும் முறை, துல்லியமான மருந்து வழங்கல், தொலைவியக்க அடிப்படையிலான வைத்திய ஆலோசனை, டிஜிட்டல் சுகாதார கருவிகள் மற்றும் பல போன்ற எமது தீர்வுகள் அனைத்திலும் புத்தாக்கத்தை உட்புகுத்தி, ஏனைய சேவை வழங்குநர்களுடன் இணைவியக்கத்திற்கு இடமளிக்கின்ற வகையில் தங்குதடையின்றிய ஒருங்கிணைந்த அணுகுமுறையினூடாக, இணைந்த கவனிப்பை வழங்கி, நோயாளரை மையப்படுத்திய பராமரிப்புடன் சுகாதாரப் பலன்களை மேம்படுத்தி, வாழ்வுகளை மாற்றியமைப்பதே இதன் ஒட்டுமொத்த நோக்கம். உண்மையில் குணமாகும் அனுபவத்தை வழங்கும் வகையில், கருணை, அன்பு மற்றும் உண்மையான தொழில்முறை உணர்வுடன் சுகாதாரப் பராமரிப்பை வழங்கி, நோயாளர்கள் விரும்புகின்றவாறு அவர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பை வழங்கக்கூடிய ஒரு எதிர்காலத்தை முன்னெடுக்க நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.      

ஆகவே ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸின் 15 ஆவது ஆண்டு நிறைவானது மேற்குறிப்பிட்ட சாதனைகள் அனைத்தையும் கொண்டாட வேண்டிய ஒரு தருணம் மட்டுமல்லாது, உண்மையான மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை முன்னெடுப்பதற்கு புத்தாக்கம் மற்றும் ஆவல் மூலமாக எதையும் சாத்தியமாக்கலாம் என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இலங்கையின் முதற்தர ஸ்மார்ட் வைத்தியசாலை மற்றும் மிகவும் அபிமானம் பெற்ற சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமம் (LMD மற்றும் Brand Finance ஆகியவற்றின் தரப்படுத்தலுக்கு அமைவாக) ஆகியவற்றை வென்றுள்ள அதன் பயணம், தொழில்நுட்பமும், கருணையும் ஒன்றாக இணைந்து, இலங்கையில் சுகாதாரப் பராமரிப்பின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸின் நோக்கத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றது.

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் பற்றி
2008 ஆம் ஆண்டில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் செயல்பட ஆரம்பித்த முதற்கொண்டே, இலங்கையின் முன்னணி சுகாதாரப் பராமரிப்பு ஸ்தாபனமாக எழுச்சி கண்டுள்ளது. ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வத்தளை மற்றும் தலவத்துகொடை ஆகிய இடங்களில் வைத்தியசாலைகளைக் கொண்டுள்ளதுடன், தரம், பாதுகாப்பு மற்றும் நோயாளர் கவனிப்பு ஆகியவற்றில் முன்மாதிரியான செயல்பாடுகளுடன், மேன்மையின் சின்னமாக மாறியுள்ளது. பல்வேறு துறைகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள கூட்டு நிறுவனங்கள் குழுமமான ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், Australian Council on Healthcare Standards International (ACHSI) அடங்கலாக சர்வதேச அங்கீகாரங்களை சம்பாதித்துள்ளது மட்டுமன்றி, Integrated Management System சான்று அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் ஒரே ஸ்தாபனம் என்ற தனித்துவமான அந்தஸ்தையும் சுமக்கின்றது.  மருத்துவ ஆய்வுகூடங்களின் விரிவான வலையமைப்பும், அர்ப்பணிப்புடன் வழங்கும் முழுமையான விசேட மருத்துவ சிகிச்சைகளையும், இலங்கை மக்கள் அனைவருக்கும் பெற்றுக்கொள்ள முடிகின்ற, உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்கும் தனது பயணத்தை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் சிறப்பாக முன்னெடுத்த வண்ணம் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT