சீதுவை பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது | தினகரன்

சீதுவை பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது

சீதுவை பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது-Bribery-Seeduwa Crime Division OIC Arrested

 

கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடமிருந்து ரூ 25,000 இலஞ்சம் பெற முயற்சி செய்த, சீதுவை பொலிஸ் குற்ற பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (13) இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால், சீதுவை பொலிஸ் வாகனங்கள் ஒன்று சேர்க்கும் இடத்தில், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரியினால் மேற்கொள்ளப்பட்ட, முறைப்பாடு தொடர்பில், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நபரை கைது செய்து, முறைப்பாட்டை மேற்கொண்டவருக்கு சாதகமாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு இவ்வாறு இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக,  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் இலஞ்சத்தை பெற்றுக்கொள்ளும் போது, வெளிநாட்டு மதுபான போத்தலுடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...