ஹஜ் பதிவுக்கான கட்டணம் செலுத்தும் இறுதித் திகதி மார்ச் 15 | தினகரன்

ஹஜ் பதிவுக்கான கட்டணம் செலுத்தும் இறுதித் திகதி மார்ச் 15

ஹஜ் பதிவுக்கான கட்டணம் செலுத்தும் இறுதித் திகதி மார்ச் 15-Registration for the Hajj Pilgrimage Due on March 15

 

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வருடாந்தம் அறவிடப்படுகின்ற மீளளிக்கும் தொகையை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் செல்வதற்காக, முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்த சகல விண்ணப்பதாரிகளும், வருடாந்தம் அறவிடப்படுகின்ற மீளளிக்கப்படக்கூடிய 25 ஆயிரம் ரூபாவை செலுத்தி பதிவை உறுதிப்படுத்தும் இறுதித் திகதி நாளை மறுதினம் (15) வியாழக்கிழமையாகும்.

குறித்த தகவலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்குறித்த தொகையை இலங்கை வங்கியின், 2327593 எனும் கணக்கு இலக்கத்திற்கு வைப்புச் செய்து பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்கு நேரடியாக சமர்ப்பித்து தமது பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பதிவு உறுதி செய்யப்படுவது இவ்வருடம் (2018) ஹஜ் பயணத்திற்கான தகைமையாக கருதப்படமாட்டாது என்பதை விண்ணப்பதாரிகள் கவனத்திற் கொள்ள வேண்டுமென்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் சுட்டிக்காட்டினார்.

(இறக்காமம் தினகரன் நிருபர் - ஜஃபர் ஏ. கரீம்)

 


Add new comment

Or log in with...