மோசமான காலநிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை | தினகரன்


மோசமான காலநிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

மோசமான காலநிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை-Bad Weather Warning for Fisherman

 

இலங்கையின் தென்மேற்காக ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கண மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கை வானிலை அவதானநிலையம் எச்சரித்துள்ளது.

காற்றின் வேகம் திடீரென் மணிக்கு 70 - 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வானிலை அவதானநிலையம், அம்பாந்தோட்டை தொடக்கம் மன்னார் மற்றும் கொழும்பு வரையில் தாழமுக்க நிலை விரிவடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளது.

இந்நிலை தொடர்பில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கமாறும் கோரப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...