'உயிர் வலிக்கிறது' -குரங்கணி காட்டுத் தீ குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் | தினகரன்

'உயிர் வலிக்கிறது' -குரங்கணி காட்டுத் தீ குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்

 

குரங்கணி காட்டுத்தீ குறித்து ‘உயிர் வலிக்கிறது’ என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் இறந்துள்ளனர்.

மீட்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறன. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “உயிர் வலிக்கிறது. ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் சிக்கிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி கொள்கிறேன்.

“சாவே" உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ; தீயே" உனக்கொரு நாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்தில் இருந்து பாடம் படிப்போம். புதிய இழப்புகள் நேராமல் காப்போம்” எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.


Add new comment

Or log in with...