பிணை மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு | தினகரன்

பிணை மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்று முடிவடைந்தது. காவல் முடிந்த நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விசாரணையை அடுத்து நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. திகார் சிறையில் கார்த்தி சிதம்பரத்தை அடைக்க உத்தரவிடப்பட்டது.

ஆதாரங்களை கார்த்தி சிதம்பரம் அழித்துவிடுவார் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்ட நிலையில் மார்ச் 24 வரையில் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் தரப்பில் பிணை மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதே நிலைதான் பிற சலுகை கோரிக்கைகளுக்கும் ஏற்பட்டது. ஏற்கனவே அவரை சிபிஐ காவலில் அனுப்பிய போது வீட்டு உணவிற்கும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

நேற்றும் வெளி உணவிற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. சிறையில் சட்டத்திற்கு உட்பட்டு கார்த்தி சிதம்பரத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும். சிறை மருத்துவர்கள் அறிவுரையின்படி அவருக்கு மருந்துகள் வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


Add new comment

Or log in with...