கட்டுப்பாட்டுக்குள் குரங்கணி காட்டுத் தீ | தினகரன்

கட்டுப்பாட்டுக்குள் குரங்கணி காட்டுத் தீ

9 பேர் பலி, 27 பேர் மீட்பு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மலை ஏற்றம் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குரங்கணி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் 36 பேர் சிக்கினர். இதனால் இருள் சூழ்ந்ததால் சிலர் அங்கும் இங்கும் சிதறி ஓடி உள்ளனர். இதில் சிலர் பள்ளத்தாக்குகளுக்குள் விழுந்துள்ளனர். வனத்துறை, தீயணைப்பு துறை, சிறப்பு காவல் படையினர் விரைந்து செயல்பட்டதால் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று நண்பகல் ஒரு மணியளவில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...