பேஸ்புக் பயன்படுத்தும் உரிமை: வீதியில் இறங்கி போராடத் தயார் | தினகரன்

பேஸ்புக் பயன்படுத்தும் உரிமை: வீதியில் இறங்கி போராடத் தயார்

பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுடன் வீதியில் இறங்கி போராடத் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

இனவாத முறுகலை தடுப்பதற்காக எனக் கூறி அரசாங்கத்துக்கு எதிரான சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் . இந்த முடக்கம் எவ்விதத்திலும் நடைமுறைச் சாத்தியமில்லை என்றும், தற்போது இளைஞர் யுவதிகள் திருட்டுத்தனமாக பேஸ்புக் பயன்படுத்த நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்ப்புப் பிரசாரங்களை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கூறி அதனை தடை செய்துள்ளமை வேடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்லேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை தற்போது சுமுகமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மறுதினத்துடன் அவசர கால சட்டமும் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் பேஸ்புக் மீதான முடக்கம் இன்னும் நீக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். (ஸ) 


Add new comment

Or log in with...