நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி; 19 ஓவர் போட்டி
இலங்கையில் இடம்பெறும் சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் நான்காவது போட்டி, இன்று (12) கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இன்று (12) பிற்பகல் 7.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்து குறித்த போட்டி, மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பித்ததோடு, அணிக்கு தலா 19 ஓவர்கள் என போட்டி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போட்டியில் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தி அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.
இந்திய அணி சார்பில் பங்களாதேஷ் அணியுடனான கடந்த போட்டியில் (08) விளையாடிய ரிஷப் பன்ட் இற்கு பதிலாக இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதற்காக லோகேஷ் ராகுல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக சுரங்க லக்மால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடனான கடந்த போட்டியில் (10) இலங்கை அணி தலைவர் தினேஷ் சந்திமால், பந்து வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்த குற்றம் காரணமாக, அவருக்கு எதிர்வரும் இரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு திசர பெரேரா தலைமைத்துவம் வழங்குவார்.
தற்போது வரை இலங்கை அணி, 6 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுள்ளது.
குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்கள்.
Add new comment