Home » National Industry Excellence Awards 2023 இல் மதிப்புமிக்க தங்க விருதை வென்ற ராஜா ஜுவல்லர்ஸ்

National Industry Excellence Awards 2023 இல் மதிப்புமிக்க தங்க விருதை வென்ற ராஜா ஜுவல்லர்ஸ்

by Rizwan Segu Mohideen
November 7, 2023 11:28 am 0 comment

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராஜா ஜுவல்லர்ஸ், அன்று முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகளில் மதிப்பு மிக்க தங்க விருதைப் பெற்ற ராஜா ஜுவல்லர்ஸ், மீண்டும் அதன் திறனை நிரூபித்துள்ளது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, அண்மையில் நெலும் பொகுணவில் இடம்பெற்ற இந்த பெருமைக்குரிய நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகள் 2023 இல் (National Industry Excellence Awards 2023) 21 சிறந்த தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்தனர். இங்கு பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள், 18 கைத்தொழில்துறை வல்லுநர்களைக் கொண்ட நடுவர் குழுவினால், பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டனர். குறிப்பாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு, உற்பத்திச் செயன்முறை மற்றும் தரநிலைகள், சூழலுக்கு உகந்த நடைமுறைகள், பணியாளர் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல் ஆகிய விடயங்கள் இங்கு உன்னிப்பாக மதிப்பீடு செய்யப்பட்டது. ராஜா ஜுவல்லர்ஸ் அதன் செழுமையான வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் சிறந்து விளங்கும் அர்ப்பணிப்புடன், இந்த அனைத்து விடயங்களிலும் சிறந்து விளங்கியதன் மூலம், குறிப்பிடத்தக்க சாதனையான இந்த தங்க விருதை பெற வழிவகுத்துள்ளது.

ராஜா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அத்துல எலியபுர இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “ஆபரணத் துறையில் சிறந்து விளங்கும் எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்தத் தங்க விருதைப் பெறுவதில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். இந்தச் சாதனை எமது ஒட்டுமொத்த குழுவினரின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. தரம், நிலைபேறான தன்மை மற்றும் ஊழியர் மேம்பாடு ஆகியவற்றில் தொடர்ந்தும் புதிய வரையறைகளை நாம் அமைப்போம்.” என்றார்.

சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக இலங்கையின் ஆபரணத் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், ராஜா ஜுவல்லர்ஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. நிறுவனத்தின் குறைபாடுகளற்ற உற்பத்திச் செயன்முறைகள் மற்றும் தரநிலைகள் ஆகியவற்றின் மூலம், இத்தொழில்துறையில் சிறந்த அளவுகோல்களை அமைத்து, நேர்த்தியான, உயர் தரமான நகைகளை வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.

அத்துடன் சூழல் தொடர்பான நிலைபேறான தன்மையுடன் ராஜா ஜுவல்லர்ஸ் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது. சூழலியல் அடித்தடத்தை (Ecological Footprint) குறைப்பதற்காக ராஜா ஜுவல்லர்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, மூலப்பொருட்கள் முதல் உற்பத்திச் செயன்முறைகள் வரை அதன் செயற்பாடுகள் யாவும் முழுமையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை பின்பற்றியதாக அமைந்துள்ளது. ராஜா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை தனித்துவமாக காட்டும் மற்றொரு முக்கிய அம்சம், தனது ஊழியர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் அது கவனம் செலுத்துவதாகும். திறமைகளை வளர்ப்பதிலும், தனது பணியாளர்களை மேம்படுத்துவதிலும் நிறுவனம் கவனம் செலுத்துவதோடு, இதன் மூலம் ஒவ்வொரு உறுப்பினரும் நிறுவனத்தின் வெற்றியில் பங்கு பெறுவதை அது உறுதி செய்கிறது.

தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகள் 2023 இல் தங்க விருது கிடைத்தமையானது, ராஜா ஜுவல்லர்ஸின் அயராத முயற்சிக்கும், அது சிறந்து விளங்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும். இந்த வர்த்தகநாமம், தங்கம் மற்றும் ஆபரண உலகில் வெற்றியின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்தும் திகழ்வதோடு, புதிய தரங்களை அமைத்து, ஒட்டுமொத்த தொழில்துறையிலும் புதிய உயரத்தை ஏற்படுத்துகிறது.

ராஜா ஜுவல்லர்ஸின் விரிவான நகைகளின் சேகரிப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும், மேலதிக தகவல்களுக்கும், www.rajajewellers.com இணையத்தளத்தைப் பார்வையிடவும். அதன் Facebook பக்கம்: www.fb.com/Rajajewellers.lk/ மற்றும் அதன் Instagram பக்கம்: www.instagram/rajajewellers.lk ஊடாக இணையலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT