மீனவர்கள் 48 மணி நேரத்துக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்! | தினகரன்

மீனவர்கள் 48 மணி நேரத்துக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்!

 

யாழ்ப்பாணம் தொடக்கம் பொத்துவில் ஊடாக கொழும்பு, காலி அம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் ஆழ்கடல் மற்றும் கரையோர கடல் பகுதியில் அலையின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதனால் எதிர்வரும் 48 மணி நேரத்திற்கு மீனவர்களை மேற்கூறப்பட்ட கடற்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் தென் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களில் மந்தமான காலநிலை காணப்படும் என்றும்  எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையானது மேற்கு மற்றும் தென் மேற்காக படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் கடுங்காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது காற்றின் வேகம் 70 - 80 கிலோமீ்ற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என்றும் வட மாகாணம், காலி, மாத்தறை மாவட்டங்களில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...