கொழும்பை அண்டிய பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு | தினகரன்

கொழும்பை அண்டிய பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பை அண்டிய பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு- 9 Hour Water Cut

 

நாளை (13) முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, களனி, வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பேலியகொட வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், பியகம பிரதேச சபைக்குட்பட்ட கோணவில வீதி, மங்குறுவில வீதி, விஜேராம வீதி, பொரலேகல வீதி ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு 9 மணி நேரத்திற்கு நீர் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...