அம்பாறை, மட்டக்களப்பில் கடும் மழைக்கான சாத்தியம் | தினகரன்

அம்பாறை, மட்டக்களப்பில் கடும் மழைக்கான சாத்தியம்

 
இலங்கைக்கு அண்மையில் நிலவுகின்ற மாற்றமடையும் அழுத்த நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்பகுதியில் மழை பொழிவதற்கான வாய்ப்பு அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் கடும் மழை ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக உயர்வடையலாம். இடி, மின்னல்களால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
கரையோர பகுதிகளில்:
 
நாட்டின் தெற்கு தென்மேற்கு பிரதேச கடலில் நிலவுகின்ற செயற்பாட்டு முகில் கூட்டம் காரணமாக, களுத்துறையில் இருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பரப்புக்கு அப்பாலுள்ள கரையோர பிரதேசங்களில் தாக்கம் ஏற்படலாம்.
 
காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்திற்கு மாற்றமடையும் சாத்தியம் காணப்படுவதனால் கடல் கொந்தளிப்பாக வரலாம் என்றும் அதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
 

Add new comment

Or log in with...