நாடு முழுவதும் கலவரம் ஏற்படுத்திய 230 பேர் கைது | தினகரன்

நாடு முழுவதும் கலவரம் ஏற்படுத்திய 230 பேர் கைது

கண்டி-நாடு முழுவதும் கலவரம் ஏற்படுத்திய 230 பேர் கைது-230 Arrested In Kandy and Whole Island

 

கண்டியில் அமைதி; தொடர்ந்தும் பிரதேசத்திற்கு பாதுகாப்பு

கண்டியில் தற்போது மிக அமைதியான சூழல் நிலவுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

குறிப்பாக நேற்று (10) மற்றும் இன்றைய தினங்களில் (11) குறித்த பிரதேசத்தில் எவ்வித குற்றச் செயல்களும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், அமைதியை நிலைநாட்டும் பொருட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற கலகம் தொடர்பில் இது வரை 161 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது தவிர நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறான கலக நடவடிக்கைகள் பதிவாகியதற்கு அமைய, மேலும் 69 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட 230 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை கண்டி பிரதேசத்தில் நேற்று (10) முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...