Thursday, April 25, 2024
Home » உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் கல்வியை பெற விரும்புவோருக்கான களம் William Angliss Institute – SLIIT

உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் கல்வியை பெற விரும்புவோருக்கான களம் William Angliss Institute – SLIIT

by Rizwan Segu Mohideen
November 8, 2023 2:22 pm 0 comment

William Angliss Institute @ SLIIT நிறுவனமானது, இலங்கையில் சமையல்கலை, விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் துறையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் அதேவேளை, தமது நிறுவனம் வழங்கும் பாடநெறிகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஊடக பிரதிநிதிகளுக்கும் ஏனைய பங்குதார்களுக்குமான வலையமைப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடத்தியது. மாலபேயில் உள்ள SLIIT நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள William Angliss Institute @ SLIITஇல் இந்நிகழ்வு 2023 நவம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்றது. William Angliss Institute @ SLIIT நிறுவனமானது, இலங்கையின் மிகப்பெரிய ஹோட்டல் துறைசார் கல்லூரி என்பதோடு, அவுஸ்திரேலியாவின் William Angliss (WAI) நிறுவனத்துடனான கூட்டு முயற்சியாகும்.  

“The Resplendent Academy by William Angliss Institute at SLIIT”இனை ஆரம்பிப்பதற்காக, இலங்கையின் சொகுசு ஹோட்டல்களை நடத்திச் செல்லும் Resplendent Ceylon உடன் William Angliss @ SLIIT நிறுவனம் பங்காளித்துவத்தை கொண்டுள்ளது.  எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதிமுதல் செயற்படவுள்ள இந்தக் கல்லூரியானது, Cape Weligama – Relais & Chateaux resortஇல் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இந்தத் துறையில் முதற்தரமான அனுபவத்தை வழங்குகின்றது. இது, சவாலான மற்றும் உற்சாகமான பணிச்சூழலில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகின்றது. 

உலகில் மிகவும் துரிதமாக வளர்ந்துவரும் ஆற்றல் மிக்க துறைகளில் ஒன்றாக விருந்தோம்பலும் சுற்றுலாத்துறையும் காணப்படுகின்றன. இது தகுதியான மற்றும் திறமையான வாண்மையாளர்களுக்கு பரந்தளவிலான தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றது. இலங்கையில் அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு, வணிக ரீதியான சமையல், பயணம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி, நிகழ்ச்சி முகாமைத்துவம், விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் பட்டிஸ்செரி (பேஸ்ட்ரி மற்றும் பேக்கிங்) பிரிவுகள் போன்ற திட்டங்களுக்கு எதிர்வரும் வருடங்களில் அதிகமான பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் அவசியம் என தொழிற்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே, வணிக ரீதியான சமையல், பயணம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி, நிகழ்ச்சி முகாமைத்துவம், விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் பட்டிஸ்செரி (பேஸ்ட்ரி மற்றும் பேக்கிங்) பிரிவுகள் (Patisserie) ஆகிய துறைகளில் உள்ள மாணவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீண்ட காலத்திற்கு பிரகாசமானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் என்பதில் ஐயமில்லை.

“இந்தத் துறையில் சிறந்த கல்வியையும் பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்குவதையே William Angliss Institute @ SLIIT நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிக தேவையாகக் காணப்படும் திறன்கள், அறிவு மற்றும் அணுகுமுறையை அவர்களுக்கு வழங்குகின்றது. அத்தோடு, கல்விசார் சிறப்பம்சங்கள், நடைமுறைசார்ந்த வெளிப்பாடு, தொழில் ஈடுபாடு மற்றும் சுய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான கற்றல் அனுபவத்தையும் நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம்” என William Angliss Institute @ SLIIT நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அனுக் வீரசிங்க தெரிவித்தார். 

நிகழ்விற்கு அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் முதலில் வளாகத்தை சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது, அங்குள்ள அதிநவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் நிறுவனத்தின் சமையலறை பகுதிகள், வகுப்பறைகள் பற்றிய பார்வையாக இது அமைந்தது. அதன் பின்னர் நிறுவனத்தின தலைமை அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, நிறுவனம் பற்றிய விடயங்களையும் புதுப்பிப்புகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். அதன் பின்னர் கேள்வி பதில் பகுதி இடம்பெற்றது. 

William Angliss Institute @ SLIIT நிறுவனத்தின் பின்வரும் பிரதிநிதிகள் நிகழ்விற்கு தலைமை வகித்தனர். அனுக் வீரசிங்க – முகாமைத்துவப் பணிப்பாளர், நிவ்ரான் வீரக்கோன் – நிர்வாக சபை உறுப்பினர், ரவீந்திர ரஞ்சித் – கல்வி விவகாரங்கள் மற்றும் வர்த்தக முகாமைத்துவத்திற்கான பிரதி முகாமையாளர், கசுன் அபேநாயக்க – தொழிற்துறை ஈடுபாடு, நிகழ்வுகள், பயணம் மற்றும் சுற்றுலாவிற்கான உதவி முகாமையாளர், கிரண் சந்த் – விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவி முகாமையாளர், ஸ்டீவன் பிராடி-மைல்ஸ் – William Angliss Institute மெல்பேர்ன் பிரதிநிதி மற்றும் விரிவுரையாளர், நிதி மற்றும் செயற்பாடுகளுக்கான நிலையத்தின் பிரதி பணிப்பாளர் கயனி ஜயதிலக.

இந்த நிறுவனமானது, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறைகளில் காணப்படும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல பயிற்சிநெறிகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் வழங்குகின்றது. மாணவர்கள் தற்போது பேஸ்ட்ரி மற்றும் பேக்கிங், மற்றும் பரிஸ்டா போன்ற குறுகிய கால நிகழ்ச்சித்திட்டங்களில் இணையலாம். விருந்தோம்பல் சான்றிதழ் கற்கைநெறியை இரண்டரை மாதங்களில் பூர்த்திசெய்ய முடியும்.  வர்த்தக சமையல் சான்றிதழ் கற்கைநெறி, பட்டிஸ்செரி சான்றிதழ் கற்கைநெறி, பயணம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி உயர்தர டிப்ளோமா ஆகிய கற்கைநெறிகளை ஒன்றரை வருட காலத்தில் கற்கலாம். விருந்தோம்பல் மேலாண்மையில் உயர்தர டிப்ளோமா மற்றும் நிகழ்ச்சி முகாமைத்துவத்தில் டிப்ளோமா ஆகியன இரண்டு வருட கால கற்கைநெறிகளாகும். ஒரு வருடத்தில் மூன்று தடவைகள் மாணவர்கள் உள்வாங்கப்படுவதோடு, ஏப்ரல், ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

William Angliss Institute @ SLIIT நிறுவனம் வழங்கும் விருந்தோம்பல் முகாமைத்துவ பாடநெறியை தொடரும் மாணவர்களுக்கு உள்ளக பயிற்சிபெறும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் உலகின் தலைசிறந்த இடமாகக் காணப்படும் சிங்கப்பூரில் சிறந்த தொழில் அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த உள்ளக பயிற்சியானது மாணவர்களின் திறன் மற்றும் அறிவினை மேம்படுத்துவது மட்டுமன்றி, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கான புதிய வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கின்றது. William Angliss Institute @ SLIITஇல் கற்பதன் ஊடாக, உயர்தரமான கல்வி மற்றும் சர்வதேச அனுபவம் என்ற இரண்டு சிறந்த வாய்ப்புகளை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். மாணவர்கள், பெற்றோர்கள், ஹோட்டல் துறைசார்ந்தோர் மற்றும் எமது நிறுவனத்தின் பிரதிநிதிகளை தொடர்புகொள்ள ஆர்வமுள்ள அனைவரும், William Angliss Institute @ SLIITஇன் இணையத்தளம், சமூக ஊடகங்கள், செய்திமடல்கள் மற்றும் நிகழ்வுகள் ஊடாக இணைந்துகொள்ளுமாறு வரவேற்கின்றோம். இந்நிறுவனத்தைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு www.cahm.lk இணையத்தளத்திற்குள் செல்லவும். 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT