Friday, March 29, 2024
Home » களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

by Prashahini
November 9, 2023 1:59 pm 0 comment

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளின் முன்னால் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்னால் அவ்வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் பல்வேறு கோசங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் தெரிவிக்கையில்:

வைத்தியர்கள், நாட்டில் தற்போது காணப்படும் எதிர்மறையான, பொருளாதார நெருக்கடியான சூழலினால் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடு செல்வதால் நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு நியாயமான தீர்வு, அவர்களை நாட்டில் தக்க வைப்பதற்கான தகுந்த தீர்வை வழங்கலாகும்.

வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் கிராமிய வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. விசேட வைத்திய நிபுணர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறுவதனால், பல விசேட வைத்திய சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயத்திலுள்ளன. வைத்தியர்களுக்கு பொருளாதார ரீதியான எந்த ஒரு மேம்பாடும் அரசினால் இதுவரை வழங்கப்படவில்லை.

நியாயமற்ற வரிக் கொள்கையினால் வைத்தியர்களுக்கு மேலும், மேலும் பொருளாதார ரீதியான நெருக்கடி. வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள், மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றன.

தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

வைத்தியர்களின் தொழில்முறை அபிவிருத்தியை மேலோங்க செய்யும் செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தாமலுள்ளன இது போன்ற பல பிரச்சனைகளுக்கு அரசு இதுவரை உரிய மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்காமல் இழுத்தடிப்பதால் நாட்டில் இலவச சுகாதாரத் துறை பாரிய ஒரு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT