அலோசியஸ், பலிசேனவின் பிணை நிராகரிப்பு | தினகரன்

அலோசியஸ், பலிசேனவின் பிணை நிராகரிப்பு

அலோசியஸ், பலிசேனவின் பிணை நிராகரிப்பு-Kasun-Palisena-Arjun-Bail-Rejected

 

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி சம்பவத்தின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இன்று (09) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் குறித்த பிணை மனு விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, உயர் நீதிமன்ற நீதவான் சம்ப விஜேரத்ன அதனை நிராகரித்தார்.

அதற்கமைய அவர்களுக்கு எதிர்வரும் மார்ச் 15 வரை விளக்கமறியலை நீடிப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.

கொழும்பு கோட்டை நீதவானினால், அவர்களால் முன்வைக்கப்பட்ட பிணை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பசிலசேன ஆகியோர் மேன்முறையீட்டு பிணையொன்றை கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபர்களான குறித்த இருவரும் கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...