கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி | தினகரன்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி-Kotahena Shooting One Killed

 

கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (08) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின்னாலிருந்தவரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் 29, 34, 61 வயதுடைய 3 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 29 வயதான ஹெட்டியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப்பிரயோகம் செய்தோர், குறித்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றுள்ளதோடு, இவ்விடயம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...