கண்டியில் 10 மணி முதல் ஊரடங்கு நீக்கம் | தினகரன்

கண்டியில் 10 மணி முதல் ஊரடங்கு நீக்கம்

Curfew-Lifted-Kandy-Digana-கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கம்
(கண்டி, திகன பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிசார் - ரொய்ட்டர்ஸ்)

 

நிலைமையை அவதானித்து மீண்டும் அமுல்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று (07) பிற்பகல் 4.00 மணி முதல் இன்று பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதி வரை விதிக்கப்ப்பட்ட, பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு, குறித்த ஊரடங்கு சட்டத்தை இன்று காலை 10.00 மணி முதல் நீக்குவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில், பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு முடிவெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


Add new comment

Or log in with...