சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார | தினகரன்

சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார

சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார சத்தியப்பிரமாணம்-Ranjith-Madduma-Bandara-Sworn-in-as-Law-&-Order-Min

 

சட்ட, ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (08) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சரான ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சியின் மொணராகலை பாராளுமன்ற உறுப்பினராவார்.

கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, இதற்கு முன்னர் சட்ட ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றிய சாகல ரத்நாயக்க நீக்கப்பட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...