பொதுஜன பெரமுனவுக்கு 44 வீதமன்றி 40 வீத வாக்குகளே கிடைத்தன | தினகரன்

பொதுஜன பெரமுனவுக்கு 44 வீதமன்றி 40 வீத வாக்குகளே கிடைத்தன

ஊடகங்களில் வெளியிடப்பட்டது போன்று பொதுஜன பெரமுனவுக்கு 44.65 வீதமன்றி 40.66 வீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் ஜனவரி 5 மாற்றத்திற்கு இணைந்த கட்சிகளுக்கு 42 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் ஹெல உருமய செயலாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.ஜனவரி 8 மக்கள் ஆணைக்கு இணைந்த மக்கள் அரசிலிருந்து தூரமாகவில்லை எனவும் இரு பிரதான கட்சிகளை இணைத்து துரித தேசிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது ஜன பெரமுனவுக்கு 44 வீதம் வாக்குகளும் ஐ.தே.கவுக்கு 32 வீதமும் சு.க அடங்கலான ஐ.ம.சு.முவுக்கு 13 வீத வாக்குகளும் கிடைத்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

ஆனால் பிரதான கட்சிகளான பொது ஜன பெரமுன,ஐ.தே.க சு.க,ஐ.ம.சு.மு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன பெற்ற 11,069,417 வாக்குகளையே மொத்த செல்லுபடியான வாக்குகளாக கருதியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் ஏனைய கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் அடங்கலாக செல்லுபடியான மொத்த வாக்குகள் 12,214,901 ஆகும்.

இதன் பிரகாரம் பொதுஜன பெரமுனவுக்கு 40.66 வீத வாக்குகளையும் ஐ.தே.க 29.40 வீத வாக்குகளையும்

சு.க அடங்கலான ஐ.ம.சு.மு 12.38 வாக்குகளையும்

ஜே.வி.பி 5.8 வாக்குகளையும் தான் பெற்றுள்ளன.

ஆட்சியமைக்க பேசி வரும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு 40 வீத வாக்குகள் மட்டும் தான் கிடைத்துள்ளது.

ஐ.தே.க, ஜனாதிபதி தலைமையிலான சு.க என்பனவும் அரசாங்கத்துடன் தொடர்புள்ள கட்சிகளும் 42 வீத வாக்குகள் பெற்றுள்ளன.

கடந்த ஜனாதிபதி த் தேர்தலில் அன்னத்திற்கு 51 வீத வாக்குகள் கிடைத்தன எனவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.(பா) 


Add new comment

Or log in with...