இனவாதிகளால் திகன பகுதியில் தாக்குதல்; கண்டியில் ஊரடங்கு | தினகரன்

இனவாதிகளால் திகன பகுதியில் தாக்குதல்; கண்டியில் ஊரடங்கு

 

நாளை (06) காலை 6.00 மணி வரை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி, திகண பகுதியில் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன் காரணமாக, கண்டி - மஹியங்கணை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...