பதிவை அழித்ததில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன முக்கிய சூத்திரதாரி | தினகரன்

பதிவை அழித்ததில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன முக்கிய சூத்திரதாரி

 சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் முக்கிய சாட்சியமான அவரது பதிவு புத்தகத்தை இல்லாமல் செய்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, நேரடி அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாகவும் இந்த விடயத்தில் அவரே முக்கியமான சூத்திரதாரியென்றும் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று கல்கிஸ்சை மஜிஸ்திரேட் நீதவான் மொஹமட் சகாப்தீன் முன்னிலையில் தெரிவித்தனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்தப் படுகொலை தொடர்பான முக்கியமான சாட்சியத்தை அழிப்பதற்கு கனிஷ்ட உத்தியோகத்தரொருவரை ஈடுபடுத்தியதாகவும் அதற்கு உதவியாக திஸ்ஸ சுகதபால செயற்பட்டதாகவும் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பிரசன்ன நாணயக்காரவிடம் இறுதியாக முக்கியமான சாட்சி மீதமாகவிருந்துள்ளதுடன் அதற்கு அவருக்கு யார் உறுதுணையாகவிருந்தார்கள் என்பதை இனங்காண்பது அவசியமாகவுள்ளதென்றும் மேற்படி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

திஸ்ஸ சுகதபால சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த அநுருத்த, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்துக்கு அவசியமான முக்கிய தகவல்கள் இல்லாத சமயம் திஸ்ஸ சுகதபால சுயவிருப்பின் பேரில் அவரிடமிருந்த சாட்சியத்தை பதிவுசெய்து பொலிஸ் மா அதிபருக்கு ஒப்படைத்துள்ளார். திஸ்ஸ சுகதபால இந்த விடயங்களை வெளிக்கொணராதிருந்திருந்தால் முக்கிய விடயங்கள் வெளியாகாமல் போயிருக்கும்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, பிரசன்ன நாணயக்கார சுகவீன முற்றிருப்பதால் அதனைக் கருத்திற் கொண்டு பிணையொன்றை வழங்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு தேவைப்படும் முதலாவது மரண விசாரணை நடத்திய சுனில் குமார, லசந்த விக்கிரமதுங்க சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்த போதும் மருத்துவ சபையினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் கூர்மையற்ற ஆயுதமொன்றின் மூலம் தாக்கியே படுகொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

முதலாவது மருத்துவ பரிசோதனையை நடத்திய சுனில் குமார, பிரசன்ன நாணயக்காரவின் உறவினராகும் என்பதுடன் திஸ்ஸ சுகதபால சாட்சியமளிப்பதற்கு நேரடி அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் இதனால் பிணை கோரும் வேண்டுகோளை நிராகரிக்குமாறும் அந்த அதிகாரிகள் மஜிஸ்திரேட்டை கேட்டுக்கொண்டுள்ளனர். (ஸ) 

 


Add new comment

Or log in with...