தியத்தலாவ சம்பவம்; கைக்குண்டை கொண்டு வந்தவர் கைது | தினகரன்


தியத்தலாவ சம்பவம்; கைக்குண்டை கொண்டு வந்தவர் கைது

தியத்தலாவ பஸ்ஸில் கைக்குண்டு வெடிப்பு-Diyatalawa Grenade Blast Inside a Bus

 

மார்ச் 16 வரை விளக்கமறியல்

தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பு விபத்து தொடர்பில் இராணுவ வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளிலின் முடிவின் அடிப்படையில், குறித்த பஸ்ஸில் பயணித்த இராணுவத்தின் 06 ஆவது இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின், அதிகாரம் பெற்ற அதிகாரி II ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சம்வத்தில் பலத்த காயமடைந்த இருவரில் ஒருவரான குறித்த அதிகாரி, தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டு, பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி தியத்தலாவ - பண்டாரவளை பிரதான வீதியில் கஹகொல்ல பகுதியில் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குறித்த வெடிப்புச் சம்பவத்தில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 சிவிலியன்கள் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தெய்வாதீனமாக குறித்த சம்பவத்தில் எவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...