ரூபா 6 கோடி; 403 கிலோ கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது | தினகரன்

ரூபா 6 கோடி; 403 கிலோ கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது

403kg-60 Mil Worth-Cannabis Seized in Negombo-நீர்கொழும்பில் 403 கிலோ கஞ்ச மீட்பு-ஒருவர் கைது
(வைப்பக படம்)

 

ரூபா 6 கோடிக்கும் (60 மில்லியன்) அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளுடன், நீர்கொழும்சைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கடற்படையுடன் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து, நீர்கொழும்பு கொப்பரா சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, 403 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வேன் ஒன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி ஏற்றிச் செல்லப்பட்ட குறித்த கஞ்சா பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...