Friday, March 29, 2024
Home » NSBயின் மெகா உண்டியல் அறிமுகம்

NSBயின் மெகா உண்டியல் அறிமுகம்

by mahesh
November 8, 2023 9:45 am 0 comment

NSBயின் மெகா உண்டியல் NSB தலைமை அலுவலக வளாகத்தில், NSB இன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ரால் மற்றும் பணிப்பாளர் சபையின் அனுசரணையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவால் சம்பிரதாயபூர்வமாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சக CBSL அதிகாரிகள், CBSL இன் உதவி ஆளுநர். A. A. M. தாசிம், பொது முகாமையாளர் / CEO அஜித் பீரிஸ், சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர்கள், உதவிப் பொது முகாமையாளர்கள், பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் NSB இன் இதர அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒக்டோபர் 31ஆம் திகதி உலக சிக்கன தினத்தை கொண்டாடும் வகையில், ஒக்டோபர் மாதம் முழுவதும் சிக்கனத்தை மக்கள கடைப்பிடிக்கும் வகையில் NSB நீண்ட காலமாக முன்னோடியாக இருந்து வருகிறது மற்றும் அதன் நாட்காட்டியில் சிக்கன மாதம் என்று பெயரிட்டுள்ளது.

பழங்காலத்திலிருந்தே சேமிப்பு என்பது சிக்கனம் மற்றும் சிக்கனத்தின் மூலம் செல்வத்தை குவிப்பது என்பதைக் குறிக்கிறது. இரண்டு மதிப்புகளும் தேசிய சேமிப்பு வங்கியின் வழிகாட்டும் கொள்கைகளாகும்.

நாட்டின் நிலவும் பொருளாதார சூழ்நிலையில், NSB ஆனது, பரந்த அளவில் உள்நாட்டு சேமிப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க விரும்புகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT