STF துப்பாக்கிப் பிரயோகம்; பாதாள உலக முக்கியஸ்தர் பலி | தினகரன்

STF துப்பாக்கிப் பிரயோகம்; பாதாள உலக முக்கியஸ்தர் பலி

Hekitta Wattala STF Shooting - ஹேகித்த வத்தளை அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு

 

மேலும் இருவர் கைது

வத்தளை, ஹேகித்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் (STF) போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பாதாள உலக குழுவின் முக்கிய சந்தேகநபர் பலியாகியுள்ளார்.

STF இற்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஹேகித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனையிடும்போது, அதிலிருந்த நபர் ஒருவரால், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அதிரடிப்படையினரின் பதில் தாக்குதலில் குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மரணமடந்தவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பாதாள உலக குழுவின் முக்கிய உறுப்பினரான 'தடல்லகே மஞ்சு' என அழைக்கப்படும் டி. மஞ்சு என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரது பிரேதம் ராகம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...