449
வெலிகம அறபா தேசிய பாடசாலையில் கடந்த வாரம் ஆசிரியர் தின மற்றும் சேவை நலன் பாராட்டு வைபவங்கள் கல்லூரி அதிபர் எம்.டி.எம் முதஹ்ஹர் தலைமையில் வெபா மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றன.
ஆசிரியர் தின வைபவத்தில் மாணவர்களது கலை, கலாசார நிகழ்ச்சிகளும் குறிப்பாக ஆசிரியர்களது நாடகங்களும் அரங்கேறின. மாணவர்களால் ஆசிரியர்களை கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.மேலும் பாடசாலையில் நீண்ட காலம் கற்பித்து ஓய்வு பெற்று மற்றும் இடம் மாற்றம் பெற்றுச் சென்ற 10 ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர். இவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் இதன்போது வழங்கி பாராட்டப்பட்டனர்.
வெலிகம தினகரன் நிருபர்