பசிலின் ரூ. 36.5 மில்லியன் மோசடி வழக்கு; விசாரணைக்கு திகதி | தினகரன்

பசிலின் ரூ. 36.5 மில்லியன் மோசடி வழக்கு; விசாரணைக்கு திகதி

Basil GI Pipe Case-Trial on June 04th

 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில், திவிநெகும திணைக்களத்திற்குரிய, ரூபா 36.5 மில்லியன் நிதி அரசாங்க நிதியை பயன்படுத்தி, தேர்தல் பணிகளுக்காக கல்வனைசுப்படுத்தப்பட்ட இரும்புக் குழாய்களை (Galvanized Iron Pipe) விநியோகித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக்கான திகதி இன்று (23) அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக, சட்டமா அதிபரினால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் (FCID) குறித்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்ந்துடுவ முன்னிலையில் இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 


Add new comment

Or log in with...