ஜோன் டி சில்வா கலையரங்கு தனியாருக்கு விற்கப்படாது | தினகரன்

ஜோன் டி சில்வா கலையரங்கு தனியாருக்கு விற்கப்படாது

 

கலையரங்கின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கான எவ்வித திட்டமும் இல்லை என்றும், இதனை உடனடியாக நவீனமயப்படுத்தி கலைஞர்களுக்கு வழங்குமாறும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இது தொடர்பாக கலைஞர்களுக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதியின் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி பண்டாரநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

மேடை நாடகங்கள் உள்ளிட்ட கலை படைப்புக்களை நியாயமான விலையில் மேடையேற்றுவதற்கான மண்டப வசதிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் கொழும்பில் உள்ள ஜோன் டி சில்வா கலையரங்கை கலைஞர்களினதும், கலை ஆர்வம்கொண்ட ரசிகர்களினதும் தேவையை கருத்திற்கொண்டு பொருத்தமான முறையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்கலையரங்கத்தை தனியார் துறையினருக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கலைஞர்களுக்கு மத்தியில் பேசப்பட்டு வந்ததுடன், ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...