நல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் (PHOTO) | தினகரன்

நல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் (PHOTO)

அமைச்சரவை மாற்றம் பெப்ரவரி 25 2018-Cabinet Reshuffle February 25 2018

 

ஐ.ம.சு.மு. அமைச்சர்களில் விரைவில் மாற்றம்

நல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளை மேம்படுத்தி, அதன் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும், என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டு மக்களும், நாடுமே, தனது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அது அறிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 10 அமைச்சுகளில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சு மாற்றம்:

அமைச்சர்கள்

1. பிரதமர் ரணில் விக்ரமசிங்க - சட்ட ஒழுங்கு அமைச்சர்
முன்னர்:
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு


2. லக்ஷ்மன் கிரியெல்ல - அரச தொழில் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சர்
முன்னர்:
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு


3. கபீர் ஹாசிம் - உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்.
முன்னர்:
அரச தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சு


4. சாகல ரத்நாயக்க - இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
முன்னர் :
சட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு


5.  ஹரீன் பெனாண்டோ - டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
முன்னர்:
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சு


6.  ரவீந்திர சமரவீர - வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்
முன்னர்:
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு

இராஜாங்க அமைச்சர்கள்

7. பியசேன கமகே - இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
முன்னர்:
சட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்


8 . அஜித் பி. பெரேரா - சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்.
முன்னர்:
மின்வலும் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு


9. ஹர்ஷ டி சில்வா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர்
முன்னர்:
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர்

பிரதி அமைச்சர்


10. ஜே.சி. அளவதுவள - உள் விவகார பிரதி அமைச்சர்.
முன்னர் :
அமைச்சு பதவி இல்லை

 


Add new comment

Or log in with...