அக்கரைப்பற்று செயலக அணி சம்பியன் | தினகரன்

அக்கரைப்பற்று செயலக அணி சம்பியன்

அண்மையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட கரம் சம்பியன் 2018 போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் சம்பியனானது. இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியை வீழ்த்தி அக்கரைப்பற்று சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.

அவ்வணி சார்பில், அணியின் தலைவர் எம்.எச். ஜுனைதீன், என்.ரி. நளீம், சரப்தீன், முபீன், சபபுதீன் ஆகியோர் பங்குபற்றியதோடு, விளையாட்டு உத்தியோகத்தர் யு.எல். அஸ்வத்தின் மேற்பார்வையில் குறித்த அணி இவ்வெற்றியை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதன் மூலம் மாகாண மட்டத்திலான கரம் சுற்றுத் தொடரில் விளையாட அக்கரைப்பற்று அணி தகுதி பெற்றுள்ளது. 


Add new comment

Or log in with...