நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் மீட்பு | தினகரன்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் மீட்பு

வடக்கு நைஜீரியாவில் பாடசாலை விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய பின் காணாமல்போன சிறுமிகள் சிலர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டப்சி என்ற சிறு நகரில் இடம்பெற்ற தாக்குதலின்போது மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காட்டுக்குள் தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து சுமார் 100 பேர் வரை காணாமல்போயுள்ளனர். இந்த சிறுமிகள் டிரக் வண்டிகளில் அழைத்துச் செல்லப்படுவதை கண்டதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

சிபொக் கிராமத்தில் 270 சிறுமிகளை பொக்கோ ஹராம் குழு கடத்திச் சென்று நான்கு ஆண்டுகளின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சிறுமிகள் பலர் காப்பாற்றப்பட்டு தற்போது இராணுவத்தினரிடம் இருப்பதாக யோபே மாநில அரசு அறிவித்துள்ளது. 76 சிறுமிகள் மீட்கப்பட்டிருப்பதாகவும் 13 பேர் தொடர்ந்து காணாமல்போயிருப்பதாகவும் பெற்றோர்கள் மற்றும் அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரு சிறுமிகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. 


Add new comment

Or log in with...