பஸ் பள்ளத்தில் விழுந்து பெருவில் 44 பேர் பலி | தினகரன்

பஸ் பள்ளத்தில் விழுந்து பெருவில் 44 பேர் பலி

பெரு நாட்டில் பஸ் வண்டி ஒன்று வீதியில் இருந்து விலகி 100 மீற்றர் ஆழமான பள்ளத்தில் சரிந்ததில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தெற்கில் அரெகியுபா மாகாணத்திலேயே கடந்த புதனன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒகோனா நதிக்கரையில் பஸ் வண்டி சரிந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை பெரு நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பஸ் புறப்படும்போது 45 பயணிகளை ஏற்றி இருந்ததாக அந்த பஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் போகும் வழியில் மேலும் பயணிகள் ஏறியிருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் பலரும் காயமுற்றுள்ளனர். 


Add new comment

Or log in with...