எரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில் | தினகரன்

எரிபொருள் விலை சூத்திரம் மார்ச்சில்

 

எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான சூத்திரமொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நேற்றைய தினம் (09) முன்வைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்று (10) காலை கொழும்பில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் கீழுள்ள வணிக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.

2019 ஆம் ஆண்டளவில் அரச வங்கிகள் தனது மூலதனத்தின் மூலம் இயங்கும் நிறுவனங்களாக மாற்றப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...